பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திரு. M. அனந்தசயனம் அய்யங்கார் ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே." என்ற அதிவீரராம பாண்டியனின் வாக்கு திரு. அனந்த சயனம் அய்யங்கார் அவர்களுடன் எனக் கு ஏற்பட்ட தொடர்பை எண்ணும் போதெல்லாம் நினைவிற்கு வரும். திருப்பதி வாழ்வில் (1960-77)முதல் ஆறு ஆண்டுக் காலம் சிறுவர்களின் படிப்பின் நிமித்தம் குடும்பத்தைக் காரைக்குடியில் தங்கும்படி செய்து தனிமையாக வாழ்ந்து வந்தேன். கிழக்கு-மேற்காகவுள்ள காந்தி சாலை யிலிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் தீர்த்தகட்ட வீதியின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறு அறையே நான் தங்கியிருந்த இடம். இக்காலத்தில் மாலை நேரங்கள் கோவிந்தராஜ சுவாமியின் சந்நிதி, இருப்பூர்தி நிலையம் ஆகிய இடங் களில் தான் கழியும். நான் தங்கியிருந்த வீதிக்குப் பின்புறம் இருப்பது கங்கைகொண்டான் மண்டபத் தெரு : கங்கைகொண்ட சோழன் பெயரால் ஏற்பட்டது. அதில் தான் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்த அனந்த சயனம் அய்யங்கார் அவர்களின் இல்லம் இருந்தது. அந்த இல்லத்தின் கீழ்பகுதியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு ஒரு குடும்பம் தங்கியிருந்தது; மேற்பகுதியில் என் அரிய நண்பர் நாராயணன் என்பார் (திருப்பதிப் பல்கலைக் கழக பொருளாதாரத்துறை விரிவுரைவாளர்). என்னைப் போலவே குடும்பத்தை ஐதராபாத்தில் விட்டு: 1. வெற்றிவேற்கை - 34