பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 மலரும் நினைவுகள் டாக்டர் உ.வே.சா. அய்யர் அவர்களின் உரை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்-கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் உரை, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் அவர்களின் உரை (கிடைத்த வரையில்) எனக்குப் பெரிதும் உதவின. எம்.ஏ. தேர்வுக்குப் படித்தபோது சிறிது அடிப்படை யான தமிழறிவுடன் திரு. பிள்ளை அவர்களின் புறநானூற்று உரையில் ஆழங்கால் பட்டபோது பாடல் கட்கு எழுதப்பெற்ற நய உரைகள் வரலாற்றுக்குறிப்புகள், வள்ளல், அரசர் இவர்களைப் பற்றிய செய்திகள் எவருக் கும் மிகவும் பயன்படத்தக்கவை என்பதைக் கண்டேன். பாடல்தோறும் விளக்கம்" என்ற தலைப்பில் காணப்படும் செய்கிகள் ஆய்வாளர்கட்கும் புலவர்கட்கும் மிகவும் பயன்படும். இதில் வரும் பல ஒப்புமைக் குறிப்புகள். இலக்கியச் சுவைஞர்க்கு மகிழ்ச்சி தருபவையாகும். இவற்றையெல்லாம் ஈண்டு சான்றுகள்காட்டி விளக்குதல் மிகை. 1965-என நினைக்கின்றேன்; அழகப்பா கல்லூரியின் வளாகத்தில் குடியிருந்த தமிழ்க் கடல் இரா. சொ. வைப் பார்த்து அளவளாவி விட்டு மிதிவண்டியில் வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது உரைவேந்தர் காரைக்குடி செக்காலைப் பகுதியில் யாரோ ஒர் அன்பரைப் பார்த்துவிட்டு நடையில் வந்து கொண்டிருந்தார்கள். செக்காலைப் பூங்கா அருகில் மிதிவண்டியை விட்டு இறங்கி வணக்கம் செலுத்தி அவருக்கு என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். என்னை நேரில் பார்க்காவிடிலும் என்னைப்பற்றியும் என் உழைப்பைப்பற்றியும் என் பல துறை அறிவைப்பற்றியும் அதிகமாகவே கேள்வியுற்றிருந்த தாகக் கூறினார்கள். நானும் ஒளிப்படத்தில் அவரைப் பார்த்திருப்பதாகவும் சங்க இலக்கியங்கள் பலவற்றிற்கு அவர் எழுதியுள்ள உரைகள் என்னை மிகவும் கவர்ந்தன என்றும் பணிவாகக் கூறினேன். மிகவும் மகிழ்ந்தார்கள்