பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை 48 இருவரும் ஜப்பார் மருத்துவமனை வரும் அளவும் பேசிக் கொண்டே நடந்து வந்தோம். அப்போது இராக்கெட்டுகள் (ஆகஸ்டு-1964) என்ற நூல் கழக வெளியீடாக வெளிவந்திருந்தது. அதைத் தமிழக அரசு பரிசுத் திட்டத்திற்கு அனுப்பப் பெற் றிருந்தது. அதற்குப் முதற்பரிசு கிடைத்திருப்பதாக அன்பு கூர்ந்து தெரிவித்தார்கள். இது நம்பகமான செய்தி என்றும் கூறினார்கள். இஃது உண்மையாயிற்று. இங்ங் ைமே 1959-இல் என் தமிழ் பயிற்றும் முறை’ (1958) என்ற நூலுக்கு முதற் பரிசு கிடைத்திருப்பதாக மதிப்பிற்குரிய பெரியவர் திரு. எஸ். சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் மூலமும், 1965இல் என் தொல் காப்பியம் காட்டும் வாழ்க்கை' (1954) என்ற நூலுக்கு முதற் பரிசு கிடைத்திருப்பதாக டாக்டர் மெ. சுந்தரமும் டாக்டர் சி. இலக்குவனார் ஆகியோர் மூலம் நம்பகமான செய்திகளாக அறிந்தேன். செய்திகளில் தவறு இல்ல்ை; மர்மமாக ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகப் பின்னர் அறிந்தேன். இதனால் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. சிலசமயம் நேர்மை தவறியும் செயல்கள் நடைபெறு கின்றன என்பதையும் என்னால் அறிய முடிகின்றது. பொறுப்பிலுள்ளவர்கட்கு இறைவன்தான் நேரிய வழி காட்ட வேண்டும். 1965-க்குப் பிறகு உரை வேந்தரைப் பார்த்துப் பேசும் பேறு பெறவில்லை. ஆனால் அவர் திருநாடு அலங்கரிப் பதற்கு சில திங்கட்கு முன்னர் சென்னை அண்ணாநகரி லுள்ள அவர் அருமைத் திருமகனார் டாக்டர் ஒளவை நடராசன் இல்லத்தில் பலமுறை பேசி அளவளாவும் பேறு பெற்றேன். அவர் பேச்சில் தமிழ்க்கடலே அலை வீசு வதைக் கண்டு மகிழ்ந்தேன். அக்காலத்தில் அவருக்கு இயல் இசை நாடக மன்றம் கலை மாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. உரைவேந்தரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் பேறும் பெற்றேன்,