பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & 6 மலரும் நினைவுகள் அகத்திணைக் கொள்கைகள் (டிசம்பர்- 1981) என்ற எனது நூல் வெளிவந்தது. இந்த நூலை உரைவேந்தரி னிடம் யான் கொண்டிருந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் அறிகுறியாக, சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல்: சைவசித் தாந்தத்தின் திலகம்; மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும் வான்சுடர்; வள்ளலார் நூலின் இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி; இமயத்தைப் புலமையால் தாழ்த்தும் துங்கமார் ஒளவை நம்துரை சாமித் தோன்றலுக் குரியதிந் நூலே. என்ற பாடலின் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந் தேன். எனினும், இப்பாடலுடன், நூல் முகத்தில் இக் குறிப்பையும் சேர்த்து வெளியிட்டேன். சித்தாந்த கலாநிதி (துரத்துக்குடி சைவ சித்தாந்த சமாஜம் வழங்கிய விருது) உரைவேந்தர் (மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிய விருது). பேராசிரியர் ஒளவை துரைசாமி பிள்ளையை அறியாத தமிழர்களே இரார். இவர்தம் தமிழ்ப்பணி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டிய ஒன்று...........இவர்தம் புற நானுாற்றுரை, பதிற்றுப்பத்து உரை திட்பமும் நுட்பமும் நுணுக்கமும் கொண்டவை என்பதைத் தமிழறிஞர்கள் நன்கு அறிவர். ஐங்குறு நூறு, நற்றிணை என்ற அகஇலக்கியங்களின் உரை அகத்திணையின் நுட்பங்களை யெல்லாம் எடுத்துக் காட்டக் கூடியவை என்பதை அக இலக்கியம் கற்போர் நன்கு அறிவர். அகத்திணைக் கொள்கைகளை எடுத்து விளக்குவார்க்கு இவை பெரிதும் துணை நிற்பவை. சில சித்தாந்த நூல்களைப் பதிப்பித்தும் நுணுக்க உரைகளைக் கண்டும் பெரும் புகழ் பெற்ற பெருமகனார் இவர். இவர் சிவப்பேறு பெறுவதற்கு முன்னர் நோயுடன் போராடிக்