பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 495 பட்டேன். இதற்குப் பல ஆயிரம் ரூபாய் தேவை. ஒய்வும் தேவை. இவற்றிற்கெல்லாம் மேலாக திருமாலின் திருவருளும் வேண்டும். எல்லாமே கிடைத்தன. 1964 செப்டம்பரில் தொடங்கிய இத்திருத்தலப் பயணம் 1969 ஜூனுடன் நிறைவு பெற்றது. சில திருத்தலங்களை என் இளைய மகன் இராமகிருஷ்ணனுடனும், சிலவற்றை என் மூத்த மகன் இராமலிங்கத்துடனும், ஒரு சிலவற்றை என் மனைவியுடனும் பெரும்பாலானவற்றை என் குடும்பத்தி லுள்ள மூவருடனும் சேவித்தேன். துவாரகை, நைமி சாரண்யம், திருப்பதி, பதரிகாச்சிரமம், சாளக்கிராமம் (இவ்வுலகிலுள்ளவை), திருப்பாற்கடல், வைகுந்தம் (இப்பருவுடலால் சேவிக்க முடியாதவை) ஆகிய ஏழு திருத்தலங்களைத் தவிர 10 திருத்தலங்களைச் சேவிக்கும் பேறு பெற்றேன். இங்ங்ணம் சேவித்த தலங்களைப் பற்றியும் திருத்தலப் பயணத்தின் போதும், அர்ச்சாவதார எம்பெருமான் களைச் சேவித்தபோதும் பெற்ற அநுபவங்களையெல்லாம் நூல் வடிவம் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் என் மனத்தில் தோன்றியது. எழுதத் தொடங்கினேன். முன்னர் பெற்ற அநுபவத்தை மீண்டும் சிந்தித்து அநுபவித்து எழுதும்போது நல்ல விருந்தை உண்ட பிறகு பிறிதொரு சமயம் அதை மனத்தால் சிந்தித்துப் பெறும் அநுபவத்தைப் போல் ஓர் அற்புத அநுபவத்தைப் பெற முடிந்தது. முதன்முதலாக மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றையும் எழுதி முடித்தேன் (மார்ச்சு - 1971). இந்த நூலை நான் வைணவத்தைத் தெளிவாக உணர் வதற்குக் காரணமாக இருந்த கருவி நூல்களைப் படைத் தவரும் ஏகலைவனுக்கு துரோணர் மானசீகக் குருவாக இருந்ததுபோன்று எனக்கு மானசீகமாகக் குருவாக அமைந்தவருமான காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங் கராசார்ய சுவாமிகட்கு அன்புப் ł_Í ©ß)!..... !!! @}{T35 நினைத்தேன்.