பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 497 ஆசாரியர் மெதுவாக வாயிலருகில் வருகின்றார். து வாதச நாமங்கள் அழகாகத் தீட்டப் பெற்ற பொன்னிறத் திருமேனி. கலையுணர்வுடன் அலங்கரிக்கும் திருமண் காப்புடைய திருமுக மண்டலம். புன்முறுவல் தவழும் திருப்பவளம். இத்தகைய தோற்றமுடைய ஆசாரி யரை முதன்முதலாகக் காண்கின்றேன். நெடுஞ்சாணாக வீழ்ந்து அவரைச் சேவிக்கின்றேன். பழங்களும் மலை நாட்டுத்திருப்பதிகள்’ என்றநூலின் முதற்படியும் கொண்ட தட்டையும் அவர் திருவடிகளில் வைத்து வணங்கு கின்றேன். அன்பொழுகப் பேசுகின்றார். விடைபெற வேண்டும்போது தம் திருமாளிகையில் திருவமுது கொண்ட பின் திரும்பலாம் என்று பணிக்கின்றார். பின் தம் இருக்கையில் அமர்ந்து பிரபந்த சதலைக் கவனிக்கின்றார். அடியேனும் சதளின் ஒருபுறம் அமர்ந்து பிரபந்த சேவையைக் கவனித்தேன். பத்துப் பதினைந்து சிறுவர் களும் இளைஞர்களும் கூட அமர்ந்து சேவிப்பதைக் காண் கின்றேன். பதினைந்து மணித்துளிகள் கழித்துத் திரும்பு கின்றேன். இப்போது மணி பதினொன்றரை. காஞ்சி வரதராசரையும் பெருந்தேவித் தாயாரையும் சேவித்துப் பேருந்து நிலையத்துக்கருகிலுள்ள விடுதியில் உணவு கொண்டு திருப்பதி திரும்புகின்றேன் நல்ல மனநிறை வுடன், 口 酉 ○ ஒரு வாரத்தில் ஆசாரியப் பெருமகனாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் "உண்மையில் பக்தர்கட்கு இந்நூல் நல்விருந்து. ஜஸ்டிஸ் முன்னுரை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. திருக்கோயில் பத்திரிகை தொடக்க ம நி-32