பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& மலரும் நினைவுகள் மான காலத்தில் மலை நாட்டுத் திருப்பதியதுவம்' என்ற என் கட்டுரை இரண்டாண்டளவும் எழுதித் தந்தேன்; பிரசுரமாயிற்று. .....அதனிற் சிறந்த அநுபவம் உமது என்று அறுதியிட்டேன். அடிக்கடி எடுத்து வாசிக்கத் தூண்டும் நூலிது...... P. B. அண்ணங்கராசாரியர். ’’ என்று எழுதியிருந்ததைக்கண்டு என் உள்ளம் குளிர்ந்தது. இதற்குப் பிறகு பிரதிவாதி பயங்கரம் இருமுறை திருப்பதிக்கு எழுந்தருளினார்கள். அப்பொழுதெல்லாம் அவரைச் சென்று சேவித்தேன். முன் செய்த நல்வினைப் பயனாலோ என்னவோ என்மீது அளவற்ற அன்பினைச் சொரிந்து வருவதைக் கண்டேன். ஒரு முறை அவர் திருப்பதிக்கு எழுந்தருளியபோது என் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் (1973) என்ற நூலையும் பிறிதொருமுறை எழுந்தருளியபோது என் பாண்டி நாட்டுத்திருப்பதிகள்’ (1977) என்ற நூலையும் அவருக்குச் சமர்ப்பித்ததாக நினைவு. வைணவன் ஒருவன் செய்யாத பணிகளை யெல்லாம் நீங்கள் செய்து வருகின்றீர்கள். திருமலைமீது எழுந்தருளியிருக்கும் சீநிவாசன் உங்கட்கு எல்லா நலன் களையும் அருளுவான்' என்று ஆசி கூறினார்கள். "அடியேன் நெற்றியில் திருநீறு வடிவில் சிவபெருமான் எழுந்தருளியிருந்தாலும் நெஞ்சில் திருமால் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டான், அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளி கொள்கின்ற பிரான்' 1. பெரியாழ். திரு. 5. 2: 10.