பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 மலரும் நினைவுகள் விளக்குகள் தாம் எரியும்.’’ என்றேன். அதற்கு நானும் தான் வருந்துகின்றேன். எவ்வளவு வருந்தி அழைத்தாலும் வைணவ கிரந்த காலட்சேபத்துக்கே வருவதில்லை. தனிமையாக அழைத்தால் யார் வரப் போகிறார்கள்? எல்லோருமே கோயிலுக்கு வருகிறார்கள். இறைவனைச் சேவிக்கிறார்கள். பிரசாதம் பெறுகிறார்கள். திரும்பி விடுகிறார்கள். பிரசாதங்களில் காட்டும் ருசியை வைணவ, கிரந்தங்களில் காட்டுவதில்லை, என்ன செய்வது? இது தான் இன்றைய நிலை’’ என்று மிக்க வருத்தத்துடன் கூறினார். இஃது இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளது. ஒரு சமயம் ஜஸ்டிஸ் டாக்டர் இஸ்மாயில் அவர்களிடம் பேசிச் கொண்டிருந்தபோது அவர் பிரதிவாதி பயங்கரத்தைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. ஜஸ்டிஸ் அவர்கள் காந்தி வழி நின்றவர். சாதி, சமயம், இனம் இவற்றையெல்லாம் கடந்த பெருமகன். இவரிடம் பிரதிவாதி பயங்கரம் சொன்னது: "ஐயா, தங்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தால் ஆசாரியப் புருஷர்களிடம் பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை (மயக்கம்) ஏற்படுகின்றது. எல்லா வற்றையும் கடந்து நிற்கும் நபி நாயகத்தை நினைவு படுத்துகின்றீர்கள். இந்தக்கூற்றை நாம் சிந்திக்கும்போது இரண்டு பெருமகனார்களின் பரந்த மனப்பான்மையை நம்மால் அறுதியிட முடிகின்றது. மறந்தும் புறந்தொழா மரபில் வந்த வைணவப் பெருமகனின் சீலம் கொழிக்கும் உள்ளத்தைக் காண முடிகின்றது. நாமும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று இந்த ஆசாரியப் பெருமகனார் இல்லை . இரண்டு மூன்றாண்டுகட்கு முன்னர் பரமபதவாசியாகி விட்டார்கள். அங்கு நித்தியசூரிகளுடனும் முக்தர் களுடனும் திருவாய்மொழி காலட்சேபம் செய்து கொண் டிருப்பதை மானசீகமாகக் கண்டு மகிழ்கின்றேன்.