பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@墨 மலரும் நினைவுகள் போல் அந்த நான்கு பக்கங்களிலுள்ள பொருள் தெளி வாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு நாட்களில் சிறார்கட்கு விளையாட்டு முறையில் கற்பிப்பதுபோல் சூத்திர விருத்தி கற்பிக்கப் பெற்றது; அதிலுள்ள கருத்துகளும் தெளிவாயின. திரு. முத்து சு. மாணிக்கவாசக முதலியார் ஆரணி பக்கம் ஏதோ ஒர் கழக உயர் நிலைப் பள்ளியில் (District Board high Schoop) Liosluss offé Gläsraël, (55,561st மூன்றாண்டு விடுப்பில் சீறாப்புராணம் பதிப் பித்தலில் டாக்டர் முகம்மது ஹ-சேன் நயினாருக்கு (அரபு மொழிப் பேராசிரியருக்குத்) துணையாகப் பணிபுரிந்து கொண் டிருந்தார். இந்தப் பணி நம் புலவர் பெருமானின் பரிந்துரையால் கிடைத்தது என்பது குறிப்பிடத் தக்கது. திரு முதலியார் நம் புலவர் பெருமான் இல்லத்திற்கு (13, வடக்கூர் செல்வ விநாயகர் கோவில் தெரு, மயிலை) அருகில் (நாட்டு சுப்பிராய முதலித் தெருவில்) ஒர் இல்லத்தில் குடியிருந்தார். இவர் அடிக்கடிக் காலை யிலும் மாலையிலும் நம் புலவர் பெருமானைச் சந்திக்க வருவார். திரு முதலியார் பெரும் புலவர். சங்க இலக்கி யத்திலும் சைவ சமய இலக்கியங்களிலும் நல்ல பயிற்சி யுடையவராதலால் நம் தலைமையாசிரியர் ரெட்டி யாருக்கு (எனக்கு) அகநானூற்றுக் களிற்றியானை நிறையிலுள்ள முதல் ஐம்பது பாடல்களைக் கற்பியும்’ என்று கேட்டுக் கொண்டார். அவரும் புலவர் பெருமான் இட்டபணியைச் சிரமேற் கொண்டு காலையிலும் மாலை யிலுமாகப் பத்து நாட்களில் ஐம்பது பாடல்களையும் மிக அற்புதமாகக்கற்பித்து விட்டார். திரு முத்து சு. மா. அவர்கள் தம் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் துற வறத்தை மேற்கொண்டு காஞ்சித் தொண்டை மண்டல முதலியார் மடத்துத் தலைவராகத் தவத்திரு ஞானப் பிரகாச சுவாமிகள் என்ற திருநாமத்தால் விளங்கியவர். அக்காலத்தில் நான் திருப்பதியில் பணியாற்றிக் கொண்.