பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

要拿 மலரும் நினைவுகள் பத்துக்கட்டுரைகள் பெ. தூரனை ஆசிரியராகக் கொண்டு கோவையிலிருந்து வெளி வந்த காலச் சக்கரம்’ என்ற திங்கள் இலக்கிய இதழில் வெளி வந்தன. இவற்றையும் கைவசம் இருந்த மீதிக் கட்டுரைகளையும் தொகுத்து கவிஞன் உள்ளம் என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட் டேன். தமிழ் இலக்கியச் சோலைக்குள் புக விரும்பு வாருக்கு இது முன்வாசல்போல் வழி காட்டும். இந்த நூல் பி.யூ அவர்கள் அணிந்துரையுடன் (சனவரி 1949) வெளி வந்தது. இந்த நூலை முதன் முதலில் தாய்ப்பால் போல் தமிழமிழ்தம் ஊட்டிய புலவர் பெருமானுக்கு, திருந்திய உளத்தை மாலடிக் காக்கிச் சேவையைத் தமிழ்மொழிக் காக்கிப் பொருந்திய லமுதை ஆர்வலர்க் கரக்கிப் புலமையை அடக்கத்திற் காக்கி மருந்தெனும் கருணை எம்மனோர்க் காக்கி மனத்துற வெய்திய பெரியோன் அருந்தமிழ்க் குரிசில் வேங்கட ராசன் அடிமலர்க் குரியதிந் நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். அக்காலத்தில் இந்நூல் பல இளம் இலக்கிய ஆர்வலருக்குத் தமிழ் விருந்தாக இருந்து வந்தது என்பதைப் பலர் என்னிடம் சொன்னதுண்டு. அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்த திருமதி சவுந்திரா கைலாசம் அவர்கள் காலச்சக்கரத்தில் வெளி வந்த என் கட்டுரை களைச் சுவைத்து மகிழ்ந்ததாகவும் குறிப்பாகப் பாரதி தாசனின் குடும்ப விளக்கில் உள்ள ஒரு பாடலின் சில அடிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற செந்தமிழ்த் தீனி என்ற கட்டுரை தம் மனத்தை மிகவும் கவர்ந்ததாகவும் இப்போது நினைவு கூர்ந்து சொல்வி மகிழ்வதை இப்போது நேரில் கேட்டு மகிழ்கின்றேன். இஃது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக" இனிக்கின்றது.