பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே.வேங்கடராஜுலு ரெட்டியார் 41 புலவரின் துறையூர் வருகை நான் துறையூரில் பணி யாற்றிய காலத்தில் ஒருமுறை பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுமாறு நம் புலவர் பெருமானை அழைத்திருந்தேன். அந்த விழாவில் 'கம்பனில் புதுமை’ என்ற தலைப்பில் பேசி மாணவர் உள்ளங்களைக் கவர்ந்தார்; ஊர்ப் பெருமக்களின் பாராட்டு தலையும் பெற்றார். இப்புலவர் பெருமான் என் சிறு குடிலுக்கு எழுந்தருளி விருந்துண்ட போது நான் பெற்ற மகிழ்ச்சி, கண்ணன் தூது சென்றபோது விதுரன் திருமாளிகைக்குச் சென்று விருந்துண்டபோது விதுரன் பெற்ற மகிழ்ச்சியையொத்திருந்தது என்று சொல்லுவேன். விதுரன், மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன் விருந்து வந்தனன்!” என்று கூறி உளம் உருகுகின்றான். அவனது உணர்ச்சியை வில்லிபுத்துாரார், உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து துள்ளினான்; விழுந்து இணைஅடி சூடினான்; துயரைத் தள்ளினான்; மலர்த்தடக் கையால் தத்துவ அமுதை அள்ளி னான் எனக் கண்களால் அருந்தினான் அளியோன்' என்று காட்டுவர். பின்னர் உணர்ச்சி வசப்பட்டு, முன்ன மேதுயின் றருளிய முதுபயோ ததியோ! பன்ன காதிபப் பாயலோ ! பச்சைஆல் இலையோ! T. வில்லிபாரதம்-கிருட்டிணன் துTது-77