பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛器 மலரும் நினைவுகள் சொன்ன நால்வகைச் சுருதியோ! சுருதிநீ எய்தற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்!” என்று பேசுகின்றான். அத்தகைய உணர்ச்சி அன்று என்பாலும் எழுந்தது. விதுரன் திருமாளிகைக்கு எழுந் தருளியவன் பகவான். என் சிறு குடிலுக்கு எழுந்தருளியவர் பரம பாகவதர். ஆகவே என் உணர்ச்சி விதுரனின் உணர்ச்சியை விட உயர்ந்தது என்று கருதுகின்றேன்! அடுத்த நாள் துறையூர் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் ஒருசிறு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. உள்ளூர்ப் பெரியவர்கள் பலர் வந்திருந்தனர். புலவர் பெருமான் சிந்தாமணி’ என்ற பொருள்பற்றி அரியதோர் உரை ஆற்றினார். மிக உயர்தரமான பேச்சாக அமைந்தது இது. அன்று இரவு திரு R. கிருஷ்ண சாமி ரெட்டியார் புலவர் பெருமானுக்கு நல்லதொரு விருந்தளித்தார். உள்ளுரிலிருந்தும் பக்க ஊர்களிலிருந்தும் சுமார் நூறு பிரமுகர்கள் வந்திருந்து சிறப்பித்தனர். காரைக்குடியில் பணியாற்றியபோது சென்னைப் பல்கலைக்கழக கல்வி ஆலோசனைக் குழுவின் (Academic Council) அழகப்பா ஆசிரியர்க் கல்லு ரிப் பேராசிரியர்கள் உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்தனர், அந்தக் குழு விலிருந்து பல்கலைக் கழகப் பேரவைக்கு (Senate) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பெற்றேன்.இதனால் (1953-1956) ஆண்டுகளில் ஆண்டிற்கு நான்கு முறைக் காரைக்குடியி லிருந்து சென்னை வரும் வாய்ப்புகள் இருந்தன. கூட்டங் களுக்கு வரும்போதெல்லாம் இவர் இல்லத்தில் தான் (35, இராக்கியப்ப முதலித் தெரு, மயிலை) தங்குவேன். இக்காலங்களில் ஒவ்வொரு முறையிலும் ஏதாவது ஒன்றிரண்டு புதிய ஆய்வுக் கருத்துகள் என் சொத்தாகச் சேர்ந்து விடும். 2. வில்லிபாரதம்-கிருட்டிணன் தூது-78