பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே.வேங்கடராஜுலு ரெட்டியார் 43 எனக்கு ஏற்பட்ட தெளிவு : இவருடன் நெருங்கிப் பழகிய இருபதாண்டுக் காலத்தில் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் எத்தனையோ பகுதிகளில் தெளிவு. ஏற்பட்ட போதிலும் குறிப்பாக இரண்டு பகுதிகளை நினைக்க முடிகின்றது. தமிழ் இலக்கண்த்தில் மிகவும் நுட்பமாக அறிய வேண்டியவை உள்ளுறையும் இறைச்சி யும். இவற்றுள் இறைச்சிப்பொருள் மிகமிக நுட்பமானது. புலவன் தான் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக்கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம். புலவன் தான் கூறிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி. இரண்டிற்கு முள்ள வேற்றுமை இதுவே என்றும் இறுதங்கு’ என்ற அடியிற் பிறந்த பெயர்தான் இறைச்சி என்றும் விளக்கு வர். அடிக்கடிப் பார்க்க நேரிடும்போதெல்லாம் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கொண்டு தெளிவிப்பார். நீர் நிறம் கறப்ப (அகம்- 18 என்ற அகப்பாடலைக் கொண்டு விளக்கியமை இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. மேலும் இறைச்சியிற் பிறக்கும் பொருளும் உண்டு என்று விளக்கினது மிகமிக அற்புதம். வடமொழி இலக்கணத்தை யும் பொருத்திக் காட்டி விளக்கினமையால் மேலும் எனக்குத் தெளிவு ஏற்பட்டது.* எனக்குத் தெளிவு ஏற்பட்ட மற்றொரு துறை வடமொழியாளர் கண்ட ரஸ் தத்துவம் இந்த அரிய கட்டுரையை இலங்கையிலுள்ள ஒரு சங்க மலருக்கு எழுதி னார். சுவையியல் என்பது கட்டுரையின் பெயர். அவர் சொல்லச் சொல்ல நானே எழுதினேன். செவ்வைப்படியும் (Fair copy) நானே எழுதினேன். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொரு கால் எழும் உள வேறுபாடு பாவம் எனப்படும். 3. கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலரில் இறைச்சிப் பொருள் பற்றிவெளிவந்துள்ள இவர் தம் கட்டுரையில் இறைச்சியின் விளக்கம் விரிவாகத் தரப் பெற்றுள்ளது.