பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 莎 மலரும் நினைவுகள் நம் புலவர் பெருமான் படுத்து அடிக்கடி எழுந்திருக்க முடியாத நிலை. ஒரு முறை புலவர் பெருமான் என்னிடம் சொன்னது. "நான் கோவிந்தர்' என்று குரல் கொடுப்பேன்: கோவிந்தன் அரைச் செவிடு. கொல்லைப் புறத்தில் வெந்நீர் தயாரித்துக் கொண்டிருப்பான். நான் குரல் கொடுத்தது அவனுக்குக் கேட்டிராது. கேட்டிருந்தால் அவசியம் வந்து என்ன வேண்டும்?' என்று கேட்டிருப் பான், கோவிந்தன்' என்ற குரல் கொடுத்ததால் கோவிந்தனே வர வேண்டும் என்பதில்லை. தாத்தா கூப்பிடுகின்றார்’ என்று இல்லத்திலுள்ளார் யாராவது வந்து என்ன வேண்டும்?' என்று கேட்கலாம். சாகப் போகின்ற கிழவனுக்கு என்ன வேண்டியிருக்கின்றது?’ என்று அண்ணியார் (கிழவி) அசட்டை செய்திருக்கலாம். மருமகள் பின்புறமாக சுவரருகில் நின்று கொண்டு அடுத்த வீட்டு அம்மாமியிடம் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பதால் என் குரல் அவளுக்குக் கேட்டிராது. பேத்தி வகுப்புத் தோழியுடன் ஏதாவது பாடம் பற்றிக் கலந்து ஆய்ந்து கொண்டிருப்பாள்; அவளுக்கும் என் குரல் எட்டியிராது. ஆனால் குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்த கோவிந்தனுக்குக் கேட்டிருக்கும். நான் கசேந்திராழ்வானாக இருந்திருந்தால்-அவனுக்கிருந்தபக்தி எனக்கிருந்திருந்தால்-அவ்ன் வந்திருப்பான். என்ன செய் வது? அந்தப் பக்குவம் எனக்கு வரவில்லை. இன்னும் என் உறவினர்கள், சுற்றத்தினர் பற்றிய பற்று அறவில்லையே. என்னிடம் இன்னும் செல்வமிருந்தால் என்னைக் கவனிப் பார்களோ? என்னவோ? வங்கியில் ரூ26|= தான் இருப்ப தாக நினைவு’ என்று சொல்லித் தாரைத் தாரையாகக் கண்ணிர் வடித்தார்.