பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர்வே. வேங்கடராஜுலு ரெட்டியார் 49 அப்பொழு தலர்ந்த செந்தாமரையினைவென்றதுபோல்’ அவர் திருமுகமண்டலம் பிரகாசித்ததை அனைவரும் கண்டு வியந்தனர். புலவர் பெருமான் எழுந்து அண்ை வரிடம் உரையாடுவது போன்ற ஒருவித பிரமை ஏற்பட்டது. இன்றளவும் சில சமயம் கனவுகளில் புலவர் மெருமானிடம் உரையாடுவது போன்ற காட்சிகள் நேரிடுகின்றன. மாலை மணி மூன்று. மயிலாப்பூர் இராக்கியப்ப முதலி தெருவிலிருந்து சுமார் ஒன்றரை ஃபர்லாங்க் தொலைவி லுள்ள சுடுகாட்டிற்குத் திருமேனியைச் சுமந்து செல்ல நான்கு பேர்கள் வேண்டுமே. மாநகராட்சி மூலம் ஒருவித ஏற்பாடும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் திரு. அய்யங்கார், பணிமகன் கோவிந்தன், பருப்பு ரெட்டியார் ஆகிய நால்வரும் திருமேனியைச் சுமந்து செல்லும் பேறு பெற்றோம். மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்து அவரைச் சரியாக நினைத்துப் பார்க்க முடியாத அடியேனுக்கு என் தந்தைக்குச்செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டதாக (அப்போது என் வயது 47) மன நிறைவு ஏற்பட்டது. இன்று திரு. அய்யங்கார் இல்லை; கோவிந்தன் எங்கோ பணியில் அமர்ந்து வேலை பார்க்கின்றான். பருப்பு ரெட்டியாரும் எங்காவது சுறுசுறுப்பாக வாணிகம் நடத்திக் கொண்டிருப்பதாகக் கருதுகின்றேன். இந்தக் கட்டுரை எழுதியதால் நான் இருக்கின்றேன் என்பது தெளிவு. எழுபத்து மூன்று அகவையைத் தாண்டும் நிலையில் உள்ள அடியேன் திருநாடு அலங்கரிப்பது என்றோ? இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது இல்லை." 5. சிலம்பு-நடுகல் காதை-அடி 181-82 ம நி-A