பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் 59. பெற்றிருந்தது. துறவற நெறியிலும் விதி தம்முடன் விளையாடுவதை மிக வருத்தத்துடன் எடுத்துரைத் தார்கள் அடிகள்: ஒருவேளை உண்டிகூட எங்கட்குத் தரக் கூட இயலவில்லையே என்று வருந்தினார்கள். என் தமிழ்த் தொண்டைப் பாராட்டி விழா எடுத்து விருது வழங்க நினைத்திருந்ததையும் தெரிவித்தார்கள். சென்னை வந்த பிறகு (1978-சனவரி) ஒருமுறை ஆழ்வார்ப்பேட்டை மகாராணி சின்னாம்பாள் தெருவில் தெய்விகப் பேரவையின் அலுவலகத்தில் அடிகளார் தங்கி யிருந்தபோது நான் அவரைச் சேவித்து ஆசி பெற்றேன். குன்றக்குடி அடிகளாரின் ஆதரவில் அடிகளார் இங்குத் தங்கியிருந்தார்கள் என்பதையும் அறிந்தேன். இல்லறத்தி லிருந்தபோது பெற்ற தொல்லைகளைவிட துறவறத்தி லிருந்தபோது அதிகத் தொல்லைகளை அநுபவித்தார்கள். அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் (குறள்-368) என்ற குறளை நினைத்துக் கொண்டேன். வறும்ை என்பதற்குப் போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம்’ என்ற பேராசிரியரின் பொருளும் நினைவிற்கு வந்தது. அவாவை அடக்க முடியாததால் அடிகளாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் இவை என்பது எனக்குத் தெளிவாயிற்று. அதன்பிறகு மடத்தின் உரிமைப் பற்றி எழுந்த வழக்கு களின் முடிவு என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. சென்னையில் தொடங்கப் பெற்றிருந்த தெய்விகப் பேரவை பற்றியும் விவரங்கள் அறியக் கூடவில்லை. ஆனால் அடிகளார் காஞ்சி மடத்தில் இருந்தபோது நோய் வாய்ப்பட்டார் என்ற தகவல் மட்டிலும் எனக்கு எட்டியது. காஞ்சியில் மடம் இவருக்கு ஏற்பட்டிருந்த நோயைத் தீர்க்கப் பொறுப்பைத் தட்டிக்கழித்ததாலோ வேறு என்ன காரணத்தாலோ கோவையில் தம் சீடர் ஒருவர் ஆதரவில் சிகிச்சை பெற்றிருந்தபோது சிவப்பேறு அடைந்துவிட்டார்