பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3. மலரும் நினைவுகள் வித்தியவனம் என்ற இரு நிறுவனங்களை அமைத்த அடிகளின் சேவை பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்கவை. முன்னது இராமகிருஷ்ணர் பாதையில் மக்களை நெறிப்படுத்துவதற்கு அமைக்கப்பெற்ற நிறுவனம். பின்னது சிறுவர்கள் நல்ல முறையில் கல்வி கற்பதற்கு ஏற்படுத்தப் பெற்ற உயர்நிலைப்பள்ளி. முன்னது காவிரிக் கரையின்மீது திருச்சி-கரூர் இருப்பூர்திப் பாதைக்கும் திருச்சி-கரூர் நெடுஞ்சாலைக்கும் இடையில் அமைக்கப் பெற்றுள்ளது. பின்னது ஆற்றங்கரைக்கும் ஆற்றுக்கும் இடையிலுள்ள படுகையில் அமைக்கப் பெற்றுள்ளது, நினைவு-1: 1944-ல் ஏப்ரல்-மேயில் அடிகளாருடன் தொடர்பு ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை வானுற வோங்கி வளர்ந்து வந்த இருபெரு நிறுவனங்களும் நன்றாகச் செயற்பட்டுக் கொண்டுள்ளன. அக்காலத்தில் அடிகளாருடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தவர் திரு. T.C. சகந்நாத ரெட்டியார் என்ற தமிழாசிரியர். குழித்தலைக் கழக உயர்நிலைப் பள்ளியில் (District Board High School) Loftur sis); Gárqūrūgīāśrff. இவருடைய புருஷகாரத்தால் (தகவுரையால்) அடிகளாரை நான் பணியாற்றிய துறையூர் உயர்நிலைப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்க அழைத்து வந்தேன். எண் அளவில் மூன்றாவது ஆண்டு விழாவாக இருந்தாலும் உண்மையில் முதலாவது ஆண் டு விழாவாகவே கருதுதல் வேண்டும். நான் ஒன்பது ஆண்டு களாக வளர்த்து விட்டு வெளியேறின பள்ளி பேரும் 2. பள்ளி 1941 இல் சூன் திங்கள் நடுநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பெற்றது. 1943-44ல் தான் நான்காம் படிவம் தொடங்கப்பெற்று உயர்நிலைப்பள்ளியாக வளரத் தொடங்கியது. 1942, 1943 இல் ஆண்டு விழாக்கள் கொண்டாடப் பெறவில்லை.