பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தவத்திரு சிற்பவானந்த அடிகள் 77 இல்லை. இங்கு மூன்றாவது பாரம் படிக்கும் நிலையில் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். வித்தியாலயத்தில் நான்கு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்றவிதி உள்ளதே ! என்றார் விதியை என் பொருட்டு மாற்ற வேண்டா. வேறு யோசனை கூறுங்கள்’’ என்றேன். சென்னை தியாகராயநகரில் உள்ள இராமகிருஷ்ணா உயர் நிலைப் பள்ளி ஏற்றது; விடுதியில் இடம் கிடைப்பது சிரமமாக இருக்கும். குஜராத்திகள் அதிகம் உள்ள இடம். தேர்வு எழுதி முயன்று பார்க்கலாம் என்றார். ஒரு கால் அங்கு இடம் பெற இயலாவிடில் என்ன செய்வது?’ என்று கேட்டேன். பெரிய நாய்க்கன்பாளையம் இராம கிருஷ்ணவித்யாலயா ஏற்றது. தொலைவு காரணமாகத் தாங்கள் விரும்பாவிடில், திருப்பதியில் வர இருக்கும் சென்ட்ரல் ஸ்கூலில் சேர்த்துவிடுங்கள். நீங்கள் நாள் தோறும் பையன் படிப்பு, வீட்டு வேலை முதலியவற்றைக் கவனியுங்கள் . உங்கட்குதான் எல்லாப்பாடங்களிலும் திறமை உண்டே' என்றார். இந்தியில் ராஷ்ட்ராபாஷா தேறியிருந்தான். வடமொழியை தனி வகுப்பில் கற்க ஏற்பாடு செய்தேன். இந்த இருமொழிகளைத் தான் கற்றான் இராம கிருட்டிணன் திருப்பதியில். கார் மாலை 5-15க்குத் திருச்சி இருப்பூர்தி சந்திப்பை வந்தடைந்தது. ஏற்கெனவே இட ஒதுக்கீடு செய்யப் பெற்றிருந்தமையால் நேராக வண்டிக்குச் சென்று அதில் ஏறிக் கொண்டோம். இன்னும் 30 நிமிடம் உள்ளது, அதற்குள் ஏதாவது சாப்பிடலாமே. தபோவனத்தில் சிற்றுண்டி அருந்துவதற்குக் கூட நேரம் இல்லாது போய். விட்டது என்று சொல்லிக் கொண்டே தாம் தயாராக வைத்திருந்த இரண்டு சத்து மாவு உருண்டைகளைத் தந்து அருந்துமாறு பணித்தார்: கமண்டலத்திலிருந்து நீரும் தந்தார். அந்தக் காட்சி இன்றும் என் மனத்தில் பசுமை யாகவே உள்ளது. இதை எழுதும்போது (21-10-1989) அடிகள் நம்மிடையேஇல்லை.சென்றமூன்று ஆண்டுகளாகத் திருநாட்டில் வாழ்கின்றார் இந்தச் சந்திப்பிற்குப் பிறது.