பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மட்டும் இருக்கிறது, அதன் அருகில் ஒரு கலைமானும் அதன் பிணையும் நின்று கொண்டிருக்கின்றன. இரண்டுமே நீர் வேட்கையால் தவித்துக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே குடிப்பதற்காக அந்நீரில் வாயை வைக்கின்றன. ஆனால் ஆண் மான் குடிப்பதுபோல் பாசாங்கு செய்கிறது. ஏன்! மெண் மான் அந்நீரைப் பருகி வேட்கை தணிய வேண்டு மென்ற விருப்பத்தால்! ஆறறி வற்ற இவ்விலங்கின் அன்பு நெறிக்கு அடிப்படையாக விளங்குவது காதலுணர்வன்றி வேறு யாதாக இருக்க முடியும்?' என்று கேட்டான் அவன்,

"சில கணவன் மனைவியரின் வாழ்க்கை போராட்டக் களமாகவே இருக்கின்றதே! அதைப்பற்றி என்ன கூறு கிறீர்கள்?' என்று கேட்டாள் அவள்,

‘வாழ்க்கை என்பதே போராட்டம்தானே! அப் =ಿಲ್ಲ வறுமை, நோய், கொள்கை வேறுபாடு tiன்று பல காரணங்கள் இருக்கலாம். இக்காரணங்களை யும் மீறி அவர்களைப் பிரியாமல் பிணித்துவைத்திருப்பது தான் காதலுணர்வு. ஆங்கில எழுத்தாளன் டி. எச். லாரன்சு வாழ்க்கைப் புயல் (Mortal coil) என்று ஒர் உணர்ச்சி மயமான கதை எழுதியிருக்கிறான். அதை நீ படித்திருக்கிறாயா?" -

"யார்? சட்டர்லி சீமாட்டியின் காதலன் (Lady Chattarleys Lover) star o L, or u sr t', u nt aar புதினம் எழுதினானே அந்த லாரன்சு தானே?’ என்று கேட்டாள் அவள்.

"ஆமாம் அவனேதான். வாழ்க்கைப் புயல் என்ற

அக்கதையில் முரண்பாடு மிக்க இரண்டு பாத்திரங்களைக்

காதலர்சளாகப் படைத்திருந்தான் அவன், எதிலுமே

ஒத்துப் போகாமல் ஒருவரை யொருவர் வெறுத்துப்

போராடிக் கொண்டிருந்தார்கள் அ க் கா த ல ரீ க ள்.

திடீரென்று அவள் இறந்து விடுகிறாள். அவன் நடைப்

&