பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

னமோ உன் மேல் ஐயமாகத்தான் இருக்கிறது' என்றாள் அலர்மேலு.

போடி பித்தி! சில மடாதிபதிகள் இல்லறத்தைப்பற்றி எழுதுகிறார்கள் என்றால், மெல்லியலார் மேனியில் படரா மல் இல்லறம் எப்படி இவர்களுக்குப் புரிந்தது என்று கேட் பாய்ப் போலிருக்கிறதே!

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று-1090

என்று வள்ளுவர் பாடியிருக்கிறாரே! இதைப் படித்தால் போதாதா கள்ளையும் காமத்தையும் பற்றிப் பேச? கள் ளைக் குடித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?" என்று கேட்டாள் அவள்.

"இந்தக் குறளை நீ சொன்னவுடன், கள் காதலுக்கு மட்டுமன்று: அரசாங்கம் அடிக்கடி உயர்த்தும் பஞ்சப் படிக்கும்(D. A.) நல்ல உவமையாகப் படுகிறது' என்றாள் அலர்மேலு.

எப்படி?’ என்றாள் அவள்.

1. கள்ளைக் கொஞ்சம் குடித்தால், மேலும் இன்னும் கொஞ்சம் கிடைக்காத என்ற ஏக்கம் குடித்தவர் உள்ளத் தில் ஏற்படுவது இயல்பு. இந்தப் பஞ்சப்படியும் அப்படித் தான். ஒரு தவனை, இப்பஞ்சப்படியைக் கொடுத்தால், அடுத்த தவணையும் விரைவில் கொடுக்கமாட்டார்களா என்ற ஏக்கம் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகின்றதல்லவா?’’ என்றாள் அலர்மேலு. -

என்னடி! என் கணவரைப் பகடி செய்கிறாயா?" என்று கேட்டாள் அவள், அப்போது வீட்டுக்குள்ளிருந்து அலர்மேலுவின் தாயார் ஆவிபறக்க இரண்டு கோப்பையில் தேநீர் கொண்டு வந்தாள். அலர்மேலு ஒரு கோப்பையைத்