பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r

4 மலர் காட்டும் வாழ்க்க்ை

குறிஞ்சி மலர் மலைநாட்டில் பன்னிராண்டுகட்கு ஒருமுறை பூக்கும். நீலநிறமாய்த் தோற்றமளிக்கும் அம் மலர்களில் பெருந்தேன் இருக்கும். குறிஞ்சி கரிய கொம்புகளைக் கொண்டு விளங்கும். இதுபோன்றே முல்லைப்பூ வெண்மை நிறமும், நறுமணமும் நிறைந்த பூவாகும். மேலை நாட்டு இலக்கியங்களில் லில்லி (Lily) மலர் பெறும் சிறப்பினும் மேலாக ஒருபடி தமிழ் இலக்கியங்களில் முல்லை மலர் பெற்று விளங்குகின்றது. கற்பின் சிறப்பினை விளக்கி முல்லைப் பூ சிறந்து நிற்கின்றது.

மருத நிலத்தே அணிபெற அமைந்துள்ள சோலைகள் ‘பூவார் சோலை'யாகப் பொலிகின்றன; அங்கு மயிலாடு கின்றன; குயில் இசை கூட்டுகின்றன என்பர் இளங்கோ வடிகளார். மேலும், அவர் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியை வருணிக்கு முகத்தான்,

கரைகின் றுதிர்த்த கவரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குகிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி

து S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென.”

ஒடியதாகக் கூறுவர்.

4. பூவர் சோலை மயிலாலப்

புரிந்து குயில்கள் இசைபாட’

-சிலம்பு. கானல்வரி : 26 5. சிலம்பு. புறஞ்சேரி யிறுத்த காதை: 164-174,