பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மலர் காட்டும் வாழ்க்ை

அறிவுடையவர் வேருென்றும் இல்லாதிருப்பினும் எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாத வரே ஆவர்.’

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடை ரேனும் இலர்.

என்று புலப்படும் வகையில் அறிவுடைமையின் சிறப்பினைப் பின்வருமாறு புகன்றுள்ளார்.

எனவே கல்வியை வற்புறுத்தி, கல்வியாற் பெறலாகும் அறிவுடைமையினைப் பாராட்டியுள்ளார் திருவள்ளுவர் எனலாம்.

முன்னரே திருக்குறளின் தொடக்கம் கடவுள் வாழ்த்தாக அமைந்திருப்பது திருவள்ளுவர்தம் தெளிந்த மதிநலத்தினைக் காட்டும் என்றேன். இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பு’ என்பதாகும். மழையின் பெருமை பேசுவது இது. மழையின்றேல் உயிர்கள் மண்ணில் நிலைக்க முடியாது. மழையின்றேல் பசும் புல்லும் தலைகாட்டாதாம். திருவள்ளுவர் கூறுகிறார் :

விசும்பின் துளிவிழின் அல்லால்மற் ருங்கே பசும்புல் தலைகாண் பரிது.

அடுத்து, நீத்தார் பெருமைபற்றிக் கூறுகிறார் திரு வள்ளுவர்.

பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்த வர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது."