பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-ஓர் அறிவுக்களஞ்சியம் 98

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

என்னும் குறளில் தெளிவுபடுத்துகின்றார். __

திருவள்ளுவரின் திருக்குறளை ஒர் அறநூல் எனலாம். திருவள்ளுவர் பெரிதும் வற்புறுத்துவது அறமே எனலாம்.

சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினுளஉங்கு ஆக்கம் எவனே உயிர்க்கு

என்னும் குறளில்,

அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?’

என்று வினவுகின்றார்.

அறங்களிற் சிறந்த இல்லறத்தை இல்வாழ்க்கை’ என்ற அதிகாரத்தில் சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.

பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்துச் செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற் கொண்டால், அவ் வாழ்க்கையின் ஒ ழு ங் கு எப்போதும் குறைவதில்லை.”

என்ற கருத்தில்,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

என்று கூறியதோடமையாது, இல்லறம் இனிது சிறக்க,

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகவும் கணவனு

டைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துபவளாக வும் அமைபவளே நல்ல வாழ்க்கைத்துணை’ என்கிறார்,