பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மலர் காட்டும் வாழ்க்கை

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

அடுத்து,

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல. பிற.

என்ற குறளில்,

“பெறத்தகுந்த பேறுகளில், அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப் பேறுகள் சிறப்புடையன அல்ல.”

என்ற கருத்தைப் பெய்துள்ளார். அரிய வாழ்க்கைத் துணை ‘யமைந்து, பெருமைக்குரிய பிள்ளைகளைப் பெற்ற குடும்பம் அன்பை அடித்தளமாகக் கொண்டு, விருந்தோம்பலைச் சிறப்பாக வைத்து, இனியவை கூறி, செய்ந்நன்றி யறிதலுடன், நடு நிலைமை பிறழாது, அடக்கத்தோடு ஒழுக்கத்தைக் கைக்கொண்டு உயரிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று திறம்படத் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்,

சில அறங்களை வற்புறுத்துவான் வேண்டி முதற்கண் “நிலையாமை பேசுகின்றார். நிலையாத இவ்வுலகின் இயல்பினை நயம்படக் கிளந்துள்ள திருவள்ளுவர்தம் நாநய மாட்சிதான் என்னே!

நெருங்ல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு.

‘நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போளுன் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை யுடையது இவ்வுலகம்’ என எடுத்து மொழிகின்றார்.

இந்த நிலையாமையினைத் தெளிந்தால் துறவு உள்ளம் வருவது உறுதி என்பதனால் நிலையாமை அதிகாரத்தை அடுத்துத் துறவு அதிகாரத்தைப் பாடியுள்ளார்.