பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o திருக்குறள்-ஓர் அறிவுக் களஞ்சியம் 97

“ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளி லிருந்து பற்று நீங்கியவனுக இருக்கின்றானே, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை என்ற கருத் தமைய,

=- யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் என்ற குறளைப் பாடியுள்ளார்.

தி:

இத் துறவுள்ளம் மெய்யுணர வைக்கிறது. மெய் யுணர்வு வாய்க்கப்பெற்றால் அவா அறுக்கும் மனப்பக்குவம் வரும்.

ஆரா இயற்கை அவாப்ேபின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.

‘ஒருபோதும் நிரம்பாத தன்மையுடைய அவாவை ஒழித்தால்: ஒழித்த அந்நிலையே எப்போதும் மாரு திருக்கும் இன்ப வாழ் வைத் தரும் என்பதாம்.

இவ்வெல்லாம் அமைந்தாலும் ஊழ் பேராற்றல் வாய்ந் தது என்பதனை,

ஊழிற் பெருவலி யாவுள’ மற்றாென்று சூழினுந் தான்முந் துறும்

என்னுங் குறளால் தெளிவுறுத்தி அறத்துப்பாலினை முடிக்கிறார் திருவள்ளுவர்.

பொருட்பாலின் முதல் அதிகாரமே இறைமாட்சி’ என்ப தாகும். அரசனின் அங்கங்களாகப் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறனைக் குறிக்கிறார். அரசனுக்கு அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நாற்பண்புகள் நன்கமைய வேண்டும் என்கிரு.ர். காலந் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் அரசனுக்கு அமையவேண்டிய அரும்

LD.—7