பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மலர் காட்டும் வாழ்க்கை

பண்புகள் என்கிறார். அரசனுடைய கடமைகள் நான்காகும். அவையாவன :

பொருள் வருவாய்க்குரிய வழிகளை மேலும்மேலும் ஆராய்ந்து இயற்றுதல், அவ்வாறு இயற்றிய பொருள்களைச் சேர்த்தல், அவ்வாறு சேர்த்த பொருளைக் காத்தல், பின் காத்தவற்றைத் திட்டமிட்டு வகுத்துச் செலவு செய்தல் ஆகிய நான்காகும்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.

பொருளாதார வல்லுநர்களும் இக் குறட் கருத்தினைப் பாராட்டி மொழிவர். இறைமாட்சியினை அடுத்துக் கல்வி அதிகாரத்தினை வைப்பது'அரசனின் அரிய கடமைகளில் முதற் கடமை. தன் நாட்டு மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டுவது கட்டாயம் என்னும் அவர் உள்ளக் கிடக்கையைப் புலப் படுத்தும்.

வலியறிதல், காலம் அறிதல், இடனறிதல் முதலியன திருவள்ளுவர்தம் அரசியற் புலமையை உணர்த்தும். அமைச்சர் பற்றியும், அவருக்கு அவசியம் இருக்கவேண்டிய சொல்வன்மை குறித்தும் திருவள்ளுவர் பொருட்பாலில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதாகும்.

நாடு’ பற்றித் திருவள்ளுவர் கூறியிருக்கும் கருத்துகள், திருக்குறள் ஒர் அறிவுப் பெட்டகம் என உறுதி செய்வதாகும்.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.