பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ருக்குறள்- ஓர் அறிவுக் களஞ்சியம் 99

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.

மேலே குறிப்பிட்ட குறள்கள் வழங்கும் செய்தியைப் பின் வருமாறு தொகுத்துரைக்கலாம் :

‘முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

“குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில் லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

மிக்க பசியும் ஓயாத நோயும் அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடை பெறுவதே நாடாகும்.

“பலவகையாக மாறுபடும் கூட்டங்களும் உடனிருந்தே அழிவு செய்யும் பகையும் அரசனை வருத்துகின்ற கொலேத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.”

நட்பையே தீ நட்பு, கூடாநட்பு என்று காணும் திருவள்ளுவர் நோக்கு அறிவின் விளக்கமாய் அமைந்த தாகும்.

இலக்கியத்தில் முதன் முதலாகப் பெண்வழிச் சேறலின் கெடுதியையும், வரைவின் மகளிரை நாடும் கெடுமதியினையும்,

கள்ளுண்ணலின் இழிவினையும், சூது விரும்பும் திதினையும் இழித் துரைக்கின்றார்.

‘மருந்து’ என்னும் அதிகாரம் திருக்குறள் அறிவுக்கடலின் கலங்கரை விளக்கமாய் அமைந்திருப்பதாகும்.