பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO மலர் காட்டும் வாழ்க்கை

‘முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்துபோற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.” மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

மேலும்,

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து.

என்ற குறளில்,

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்கு வகைப் பாதுகாப்பு உடையது.”

என்ற கருத்தைப் புலப்படுத்தியிருப்பது, இக்கால மருத்துவ

இயல் மேதைகளும் வியக்கும் செய்தியாகும்.

  • உழவு’ எனும் அதிகாரமும் திருவள்ளுவர் அறிவு

நுட்பத்தை உணர்த்தும்.

‘உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதல்ை எவ் வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.” ==

என்ற கருத்தில்,

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனல் உழந்தும் உழவே தலை.

என்கிரு.ர்.

-ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது. இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு நீர்பாய்ச்சுதலைவிடக் காவல் காத்தல் நல்லது’ என்ற கருத்தமைய,