பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-ஓர் அறிவுக் களஞ்சியம் 40+

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.

என்ற குறளை அமைத்துள்ளார்.

திருவள்ளுவரின் இன்பத்துப்பாலில் கவிநயங்கண்டு தெளியலாம். மருதத்திணை அமைக்காது ஊடலைப் பாடுகிரு.ர். மேலும் திருவள்ளுவரின் உளவியல் நுட்பமும் இப்பகுதியால் புலகிைன்றது.

யான் நோக்குங் காலை கிலளுேக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்.

‘யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்கு வாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.’

தன் மனங்கவர்ந்த மங்கை நல்லாளின் நலம்புனையக் காதலன் சந்திரனைப் பார்த்து திங்களே! மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும் பினல், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே’ என்ற கருத்தில்,

மலரன்ன கண்ணுள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.

என்கிருன். இதுபோன்றே காதலியின் காதல் நெஞ்சம், ‘எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றாேம் என்ற கருத்துப்பட அமைந்துள்ள,

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.

என்ற திருக்குறளில் காணலாம்,