பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சிலம்பில் வேடுவர் குறவர்

முன்னுரை

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்னும் தம் கொள்கையை நிறுவவே, இளங்கோ அடிகள் தம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் வேடுவர், குறவரையும் படைத்திருக்கிறார் எனலாம். வேட்டுவ மகள் சாலினி வாயி லாகக் கண்ணகியை,

இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி

எனப் போற்றிய ஆசிரியர், இறுதியில் குன்றக்குறவர் வழி யாகவே பத்தினிக் கோட்டத்திற்கு வித்திட்டிருப்பது இங்கே சுட்டத்தக்கது.

இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம்

இல்லையாதலின்

சிறுகுடி யீரே சிறுகுடி யீரே

தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே

என அக் குறவர்கள் கூறுவது அவர்தம் சிறு குடியினருக்கு மட்டுமல்லாமல், தமிழ்க் குடிக்கே ஆகும் என்பதைச் சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்து நிறுவுவதன் மூலம் அறியலாம். இவ்வாறு காவியத் தலைவியின் ஏற்றத்திற்