பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் காட்டும் வாழ்க்கை 5

பரிபாடற் புலவரொருவர் வையை தந்த வற்றாத நீரால் வளம் பெருக்கிய ஆற்றங்கரை மரங்கள் அதற்குக் கைம்மாருக மலர்களைச் சொரிந்து நின்றன என்று பாடியுள்ளார்.”

வழிபாட்டில் மலர்கள்

திருப்பரங்குன்றத்து முருகனை வழிபடச் செல்லும் மக்கள் பூக்களைத் தம்முடன் கொண்டு செல்கின்றனர். மலர்களால் இறைவனை வணங்கும் முறை திராவிடர் சிறப்பு முறை என்பர் ஆய்வாளர் சிலர். வைதிக வழிபாட்டில் மலர் வழிபாடு இடம் பெற்றிருக்கவில்லை என்றும், ஆரியர் திராவிடரிட மிருந்தே மலர் வழிபாட்டு முறையைக் கற்றனர் என்றும், “பூஜை’ என்னும் வடசொல் பூ செய்’ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், வேதகால ஆரியர் இறைவனுக்கு வேள்வியியற்றி அதில் மிருகங்களின் தசை முதலியவற்றைப் போட்டு வழிபாடியற்றினர் என்றும், திராவிடரே தொன் னெடுங் காலந்தொடங்கி மலர் வழிபாட்டு முறையினை மேற் கொண்டொழுகினர் என்றும் அறிஞர் எஸ். சுநீதகுமார சட்டர்ஜி குறிப்பிடுவர்.8

6. பரிபாடல்: 16 : 1.6.

கரையொழுகு தீம்புனற் கெதிர்விருந் தயர்வபோல்’ 7. பரிபாடல் : 8 : 96-101

| 8. S. K. Chatterji, Race Movements and Prehistoric Culture in the Vedic Age, London, 1951, p. 160.

• ‘The characteristic offerings in the Puja rite Viz., flowers, leaves, fruits, water etc, are not known to the homa rite except in instances where it has been influenced by the puja. It has been suggested with good reason that puja is the pre-Aryan, in all livelihood the Dravidian from of worship, while the homa is the Aryan: and throughout the entire early Vedic Literature, the puja ritual with flowers etc., offered to an image or