பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. மலர் காட்டும் வாழ்க்கை

குக் காரணமாகிய இவ்விரு இனத்தவரைப் பற்றி விரிவாகக் காண்போம்.

வேடர் குறவர் வாழ்கிலம்

இளங்கோ அடிகள் வேடர் வாழ்வினை வேட்டுவ வரியில் விரித்துக் கூறி, குறவரைக் குன்றக் குரவை முழுவதிலும், காட்சிக் காதையின் முதற் பகுதியிலும் கூறியிருக்கிரு.ர். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலை வெளி களிலே வேடர் வாழ்ந்திருந்தனர். மாரி வளம்பெரு அப் பாலை வெளிகள், கடுங்கதிர் திருகலின் கொடிய வெம்மை யுடையனவாயிருந்தன. முள்வேலிகளைச் சூழ்ந்து காவல் செய்யப் பெற்ற மன்றங்களில் வேடர்கள் ஒருங்கு கூடி வாழ்ந்தனர் என்பதை, இடுமுள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் (வல்வில் எயினர் மன்று) என்ற அடிகளால் அறிய முடிகிறது. இவர்கள் தனித்தனியே இல்லங்கள் அமைத்தும் வாழ்ந்தனர் என்பதை, நரை முதுதாடி எயினர் எயிற்றியர் முன்றில் எனவரும் பாடல் அடியால் அறிய முடிகிறது.

தொல்காப்பியர் கூறும் மைவரை குன்றமே குறவர்கள் வாழ்விடமாகும். குலமலை உறைதரு குறவர், மலைமிசை மாக்கள்’ என்னும் அடிகளைக் காண்க.

தொழில்

வேடுவரை இளங்கோ அடிகள் வில்லேர் உழவர்’ என்று குறிப்பிடுகின்றார். மாரி வளம் நிறைந்த மருதநிலங்களில் வாழும் உழவர்கள், கலப்பை கொண்டு ஏர் ஒட்டிப் பயிர் விளைத்து வாழ்வார்கள். மாரி வளம் பெருத பாலைகளில் வாழும் இவ் வேடுவர்கள், வில்லை ஏராகக் கொண்டு, வழிச் செல்வோரை வருத்தலாகிய உழவைச் செய்து, பொருள்