பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 105

கொண்டு வாழ்பவர். ஆகையால், இவரை இளங்கோ அடிகள் “வில்லேருழவர்’ என்று சிறப்பிக்கின்றார். இன்னும் விற்றாெழில் வேடர், எய்வில் எயினர், வேய்வில் எயினர்’ என அவர்தம் தொழிலுக்கு உறுதுணையாகிய வில்லைப் பல விடங்களுலும் சிறப்பித்துப் பேசுகின்றார். வருத்தும் தொழில் செய்து வாழும் இவர்கள் அருள் சிறிதும் இல்லாதவர் என்பதை, பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும் அருளில் எயினர் என்று குறிப்பிடுகின்றார். இவர் கள், பாலை வழிச் செல்லும் மருதநிலத்து மக்களின் ஆநிரை களைக் கவர்வார்கள். ஆக்களைக் கவர்வதும், அவற்றை உடையாரை அலறத் தாக்குவதுமே இவருடைய இன்றி யமையாத தொழிலாகும். அயலூர் அலற எறிந்த நல் ஆனிரைகள் என்னும் பாடற் பகுதியால் இவர்தம் தொழில் தெளிவாகும். ஏனம், புலி முதலிய விலங்குகளே இவர் வேட்டையாடும் தொழிலுடையவர் என்பது,

ஏனத்து வளைவெண் கோடு பறித்து மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து

என வரும் அடிகளால் அறியலாகும்.

இனி, இவ்வாறல்லாமல் குன்றம் வாழ் குறவர்கள், குன்றங்களில் தினை விளைத்து வாழும் அருள் வாழ்க்கை வாழ்பவர்களே. தினையுண்ண வரும் குருவிகளைத் துரத்தியும், கிளிகளைக் கவண்கொண்டு கடிந்தும் அவர்கள் வாழ்கிறார்கள். இவர்களும் வீரத்தில் சிறந்தவர்களே. அவ் வீரத்தை வழிச் செல்வோரை வருத்தப் பயன்படுத்தாமல், குன்றம் வாழ் புலிகளை வேட்டையாடவும், யானைகளைப் பிடிக்கவுமே பயன் படுத்துகின்றார்கள். மேலும் தேனெடுப்பது அவர்களின் தொழில்களில் ஒன்று. குன்றங்களில் முழவின் ஒலியாகி, அருவிகள் இடைவிடாது முழங்கிக் கொண்டிருக்கும். மலைபடு

H