பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மலர் காட்டும் வாழ்க்கை

பொருள்களாகிய அஞ்சனம், அரிதாரம், சிந்துரம் ஆகியன கலக்கப் பெறுதலான் அவ் வருவி, இந்திர வில்லைப் போன்று பலநிறம் உடையதாய் நறுமணம் நாறி வீழ்ந்து கொன் டிருக்கும். அவ்வருவிகளிலும், சுனைகளிலும் நீராடிக் களிப்பதும் இக் குறவர்தம் தொழில்களாம்.

குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்

எனக் குறவர்கள் கூறும் கூற்றின் துணைகொண்டும்,

செந்துரச் சுண்ணம் செறியத்துய்த் தேங்கமழ்ந்து இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்திங் கிழியும் மலையருவி ஆடுதுமே

எனக் குறமகள் ஒருத்தி தன் தோழியை அழைப்பதன் துணை

கொண்டும், மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனும் அவனுடன் வந்தோரும்,

நறவுக்கண் ணுடைத்த குறவர் ஓதையும்

புலியொடு பொரூஉம் புகர்முக ஒதையும்

பயம்பில் வீழ் யானைப் பாகர் ஓதையும்

கேட்டதாக வரும் பகுதி கொண்டும் குறவரின் தொழிலை அறிவது எளிதாகிறது.

உணவு உடை அணிகள்

வேடுவர்கள், வேட்டையாடிய விலங்குகளின் நினங் கலந்த சோற்றையே பெரிதும் விரும்பி உண்பார்கள். அவரை, துவரை முதலியவற்றின் அவியலையும் உண்ணுவார்கள்.