பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 107

புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

எனவரும் அடியால், அவருடைய உணவுகளை அறிய முடிகிறது. அவர்கள் கள்ளும் விரும்பி அருந்துவார்கள். மட்டுண் வாழ்க்கை என்ற தொடரால், வேடுவர் தம் வாழ்க்கையைச் சிறப்பிக்கிறார் இளங்கோ அடிகள். எயினர் வாழிடங்களில் கள் விற்பதற்கெனப் பெண்கள் பலரும் இருந்தனர். அவர் களைக் கள் விலையாட்டிகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ் வேடுவர்கள், தாம் வேட்டையாடிக் கொன்ற யானே மற்றும் புலிகளின் தோல்களையே ஆடைகளாய் உடுத்து, அவற்றையே தாம் வணங்கும் தெய்வத்திற்கும் அணிவித்தனர். ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்தே இவர்கள் வாழ்ந்தனர்.

பாம்பின் வடிவில் செய்யப்பெற்ற பொன் அல்லது வெள்ளி நாணை இவர்கள் அணிந்து கொண்டதோடு, பன்றியின் வெள்ளிய பற்களைப் பிறையெனத் தலைகளில் சூடிக் கொண்டனர். இவர்கள் புலிப்பல் தாலிகளை விரும்பிக் கழுத்தில் அணிந்துகொண்டனர். வேட்டுவப் பெண்கள் மேகலையாக, புள்ளிகள் நிறைந்த புலித்தோலையே உடுத்துக் கொண்டனர். சாலினியெனும் வேட்டுவ முதுமகளுக்குக் கலையமர் செல்வியின் கோலம் புனையும்போது, மேற்கூறிய அணிகளை அணிவித்து அழகு செய்தனர் என்பதால், அவ் வணிகளையே வேட்டுவ மகளிரும் அணிய அறிந்திருந்தனர் எனத் தெரிகின்றாேம்.

தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைங்ாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து மற்றது முளைவெண் திங்க ளென்னச் சாத்தி