பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மலர் காட்டும் வாழ்க்கை

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலிகிரை பூட்டி வரியும் புள்ளியும் மயங்கு வான்புறத்து உரிவை மேகலை உடீஇ

எனவரும் பகுதி, வேடுவர் அணிகளை விளக்குகிறது. இவர்கள் காலில் கழலும், சிலம்பும் அணிந்த மையை

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

என்பது கொண்டும் அறியலாம்.

குறவர்கள் குன்றத்தில் பயிராகும் தினையைக் குற்றிச் சமைத்து உண்பார்கள். தேனும், மதுவும் இவர்கள் குடித்துக் களிப்பார்கள். மலையில் விளையும் பலவின் கனி, மாவின் கனி, வாழைக்கனி, தேங்காய் இவைகளும் இவர்தம் உணவே யாகும். மலைவளம் காண வந்த செங்குட்டுவனுக்குக் காணிக்கையாகக் குறவர்கள் வழங்கிய பொருள்களை ஆசிரியர் குறிப்பிடுவதன் துணைகொண்டு, குறவர்கள் உணவுப் பொருள் களையும் அணியும் அணிகலன்களையும் அறிய ஏதுவாகிறது.

யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நூறும் கொழுங் கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும்