பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 109

கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்

என இளங்கோஅடிகள் பட்டியல் இட்டுக் காட்டும் பொருள் களின் துணைகொண்டு, மதுவின் குடங்களைக் குறவர்கள் குடித்துக் களித்ததையும், வாழை, பலா, மா முதலான முக்கனிகளைச் சுவைத்ததையும், தேங்காயையும் கரும்பையும் சுவைத்து, கமுகம் பாக்கினை உண்டதையும் அறியமுடி கிறது.

குறவர்தம் ஆடை பற்றிய குறிப்பு யாண்டும் கூறப்பட வில்லையாயினும், அவர்தம் அணிகளை அறியும் குறிப்புகள் பல உள. இறைவளை, ஆய்வளை, செறிவளை என வரும் குறிப்பு களால், குறமகளிர் கைகளில் செறிய வளைகளை அணிந் திருந்தமை புலனாகிறது. நேரிழை நல்லாய்” எனவரும் குறிப்பால் அவர்கள் வேறுபல அணிகளை அணிந்திருந்தமை புலனாகும். “அளந்து கடை அறியா அருங்கலம் எனக் குறித்த ஆசிரியர் அவற்றைத் தனித்தனியாக விரித்துரையாமையால், குறவர்கள் அணிந்த அணிகளை விரிவாக அறிய இயவவில்லை. அகிலினைக் கொண்டு கூந்தலை மணப்படுத்திக் கொண்டுள்ளனர். அஞ்சனம், அரிதாரம், சந்தனங்களையும் அவர்கள் பயன்படுத்தி யுள்ளனர். கடம்ப மலர்களைக் கண்ணிகளாக்கித் தலையில் அணிந்து கொள்வர் என்பதை, மன்றலங் கண்ணி மலை நாடன், கடம்பு குடி முதலான நடைமுறைப் பழக்க வழக்கங்களுணர்த்தும் தொடர்களால் உணர்த்துகிரு.ர்.

வேடுவர்கள் ஆறலைத்துண்ணும் தம் தொழில்வளம் பெருகத் தங்கள் குல தெய்வமாகிய கொற்றவையை வணங்கும் பழக்கம் உடையவர்கள். கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுக்காவிடில், தம் தொழில்வளம் குறையும் என நம்பினர். கலையமர் செல்வி கடனுணரின் அல்லது சிலை யமர் வென்றி கெடுப்போளல்லள் என்று நம்பி, அவளுக்கு