பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 மலர் காட்டும் வாழ்க்கை

விழாவெடுத்து, தம் தலையைத் தாமே வெட்டிப் பலிகொடுத்து வழிபடுவர். தம் வேடர் குலத்தில் சிறந்த ஒரு முதுமகளைக் கொற்றவையின் கோலம் செய்வித்து, அவளுக்கு வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் படைத்து, அவளுடைய புகழைப் பாடியும் ஆடியும் வழிபட்டுத் தம் தொழில் வளம் சிறக்க வேண்டுவர். இளங்கோவடிகள் காட்டும் வேடுவர்கள், தம் தலையைத் தாமே அரிந்து மிடற்றில் பொங்கும் குருதியைக் கொற்றவைக்குக் கொடுத்துத் தொழில் வளம் சிறக்க வேண்டுகிறார்கள்.

ஐயை கோட்டம் இவர்கள் வழிபடும் கோயிலாகும். அக் கோட்டத்தின்கண், வேட்டுவ முதுமகளுக்குக் கொற்றவையின்

கோலம் புனேவித்துப் பலிகொடுத்து, இசைக் கருவிகளை முழக்கி

ஆடியும் பாடியும் கொண்டாடுவர்.

குறவர்களுடைய பழக்க வழக்கங்களில் குறிப்பிடத்தக்க சில உள. வியத்தகு நிகழ்ச்சியைக் கண்டவிடத்து அதைத் தெய்வச் செயலாக எண்ணிப் போற்றுதலுக்குரியாரை விழா வெடுத்து வழிபடும் வழக்கத்தை அவரிடம் காண முடிகிறது. ஒரு முலையிழந்த திருமா பத்தினியாகிய கண்ணகி, வேங்கை மரத்து நிழலில் தங்கியிருந்து, வானவர் அனுப்பி வைத்த தேரில், கொழுநனோடு சென்றமையை நேரில் கண்ட குறவர், கண்ணகியைத் தம் குலத்துதித்த வள்ளியாகவே எண்ணி வழிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது. பெருமலை வளஞ்சுரக்க, ஒரு முலே இழந்த நங்கைக்குப் பூப்பலி செய்து, விரவு மலர் தூவி அவர்கள் விழா வெடுக்கின்றனர்.

வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக் கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே கான நறுவேங்கைக் கீழாள் கணவைெடும்