பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 111

வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே மறுதர வில்லாளை ஏத்திநாம் பாட

எனவரும் குன்றக் குரவைப் பகுதி, கண்ணகியைக் கண்ட குறவர்தம் வியப்பும், வணக்கமும் கூறுவதாகும். மலைவளம் காண வந்த செங்குட்டுவனைக் கண்டு வணங்கி, அவனிடம் அவ்வியத்தகு நிகழ்ச்சியைக் கூறுகிறார்கள் :

கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துய ரெய்தி வானவர் போற்ற மன்னெடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள் எங்காட் டாள்கொல், யார்மகள் கொல்லோ?

என அவர்கள் உரைக்கும் உரையிலும் வியப்பே மேலிடுகிறது. வியத்தகு செயல் புரிந்த கண்ணகியை முதற்கண் தெய்வமாகத் தொழுது வழிபட்டவர் குறவர்களே. பின்னள், சேரன் செங்குட்டுவன் பலர்தொழு பத்தினிக் கோட்டம் அமைத்திட வித்திட்டவர்களும் அவர்களே. இளங்கோவடிகள், தீந்தமிழ்க் காப்பியமாம் சிலம்பை இயற்ற, வித்திட்ட நற்றவத்தரும் இக் குறவர்களே.

தங்கள் மலைப்பகுதிக்கு மன்னன் அல்லது அவனைச் சார்ந்தோர் வருவராயின், அவரைக் கண்டு மலைப்பொருள் களைக் காணிக்கையாக்குவதும் அவர்தம் பழக்கமாகும். அப் பழக்கத்தின்படி யானைவெண்கோடு முதலாக வாழையின் இருங்கனித்தாறு ஈருக உணவுப் பொருள்களையும் மணப் பொருள்களையும் வழங்கியமையை ஏற்கெனவே எடுத்துக் காட்டினேம். அவற்றாேடு ஆளிக்குட்டி, சிங்கக் குட்டி, புலிக் குட்டி, மதயானைக்கன்று, குரங்குக்குட்டி, கரடிக்குட்டி, மான் குட்டி, கத்துாரிக்குட்டி, கீரி, மயில், புழுகுப் பூனை, கானக்கோழி ஆகியவைகளையும் செங்குட்டுவனுக்குக் குறவர்கள் வழங்கு