பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மலர் காட்டும் வாழ்க்கை

வதால், தங்கள் வேந்தருக்கும் வேண்டியவருக்கும் சிறந்த பொருள்களை வழங்கி மகிழும் பழக்கம் குறவர்களுக்கு உண்டு என்பதைத் தெளிய முடிகிறது.

நெஞ்சப் பாங்கும் பண்பாடும்

வழிச்செல்வோரின் பொருள்கொண்டு புண்செயும்

அருளில் எயினர்களாக இருந்தாலும், அருளற்ற அவர் களுக்கும் ஒருவகையில் அருளிருக்கவே செய்கிறது. அவ் வருளால் அவர்களும் ஈகைசெய்து வாழ்கின்றனர். ஆறலைத்துக் கவர்ந்த ஆனிரைகளைத் தங்களுக்குக் கருவி வடித்துக் கொடுத்த கொல்லருக்கும், விழாக்களில் துடிகொட்டும் புலையருக்கும், யாழ்மீட்டிப் பாடவல்ல பாணருக்கும், ஆநிரை அவர்தம் பாலைவழிச் செல்வதை ஒற்றறிந்து கூறிய ஒற்றருக்கும், புள் முதலாக நல்நிமித்தம் பார்த்துக் கூறிய கணியருக்கும், கள் விஆலயாட்டிகளுக்கும் தரும் நெஞ்சப் பாங்கினைக் கொண்டிருந் தனர் அவ் வேடுவர்கள். வயது முதிர்ந்த தம் குலத்து வேடுவர் கள், வேட்டத்தொழில் செய்து வாழ இயலாத இயலாமையை அறிந்த அவ் வேடுவர்கள், அம் முதுவேடுவர்களும் வேடுவச்சி களும் வாழும் பொருட்டு அவர்களுக்கும் ஆநிரைகளை வழங்கு கின்றனர்.

தலைநாளை வேட்டத்துத் தந்தால் ஆகிரைகள்

கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல

நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன.

சுரங்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிங்ல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன.

அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன.