பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 113

எனவரும் வேட்டுவவரிப் பகுதிகளால் வேடுவர் நெஞ்சப் பாங்கினையும், பண்பாட்டையும் அறிய முடிகிறது. கொற்ற வைக்குப் பலியாகத் தம் தலைகளைத் தாமே அரிந்து வைக்கும் வேடுவர் செயல், அவர்தம் நெஞ்ச உறுதிப்பாட்டைக் காட்டு கிறது.

குறவர்கள் பிறர் துன்பம் கண்டவிடத்து வாளாவிராது, அவர்தம் துன்பத்தை அறிந்து, அகற்ற முயலும் நெஞ்சப் பாங்கு உடையவர் என்பதை, வேங்கை மரத்து நிழலில் வந்து நிற்கும் கண்ணகியை நோக்கி,

மலைவேங்கை நறுங்ழலின் வள்ளிபோல்வீர் மனங்டுங்க முலையிழந்து வந்துகின்றீர் யாவிரோ

என வினவுவதிலிருந்து அறியலாம். கொண்ட கொழுநனேடு கண்ணகி வானுலகம் செல்வதைத் தம் கண்களால் கண்டு, அவளைத் தம் குலத்துதித்த வள்ளியாகவே எண்ணித் தொழு வதும், அவர்தம் சிறந்த நெஞ்சப்பாங்கைக் காட்டும்.

மேலும் கண்ணகியை வணங்கும் அக் குறமகளிர், கண்ணகியைப் போன்றே கற்பினைப் போற்றும் சிறந்த பண்பாடு உடையவர்கள். குறமகள் ஒருத்தி, தன் காதலன் மலைதீண்டி வந்த புனலில் தன்னையல்லாத மற்றாெருத்தி நீராடு வதையும் பொருதவளாய் இருக்கிருள். இதனை,

என்னென்றும் காணேம் புலத்தல் அவர்மலைப் பொன்னுடி வந்த புதுப்புனல் W பொன்னடி வந்த புதுப்புனல் மற்றையார் முன்னடி ைேம்தோழி நெஞ்சன்றே

என்ற குன்றக்குரவைப் பகுதியால் அறியலாம். மேலும் தாம் விரும்பிய காதலரை மணக்க அருள்புரியுமாறு அவர்கள் தாம் வணங்கும் முருகனை வேண்டுகிறார்கள்.

ம.-8