பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 மலர் காட்டும் வாழ்க்கை

காதலர் வாழ்வில் மலர்

உடன்போக்கு மேற்கொள்கிரு.ர்கள் தலைவனும் தலைவியும். ஒரு கானத்து இவர்கள் சிறுவர் சிறுமியராக இருந்தபொழுது சிறிதுகாலம் தங்களுக்குள் கலாம் விளைவித்துக் கொண்டவர் கள். காதற் செவிலியர் இடை நின்று தடுத்தபோதும் ஏதில் சிறு செரு’ மேற்கொண்டவர்கள். ஆனல் அக்காலம் கழிந்தொழிந்தது. இப்போது மாலையிற்றாெடுத்த இரட்டை மலர்கள் போன்று காட்சியளிக்கின்றனர் என்கின்றார் மோதாசனர் என்னும் புலவர்.9

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு

ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற் பொருட்டுக் கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் ஏறத் தாழ முப்பத்தைந்து அடிகளில் தொண்ணுாற்றாென்பது மலர்கள் சுட்டப்படுகின்றன. இங்குச் சுட்டப்படும் மலர் களிற் பல இன்று நம்மால் அறிந்துகொள்ள முடியா நிலையில் உள்ளன. காரணம் நாம் தற்போது இயற்கையை விட்டு நெடுந்தொலைவு வந்துவிட்டோம். இலக்கியம் தோன்றுவதற்கு நிலைக்களய்ை அமையும் பொருள்கள் மக்களும் இயற்கையும். இயற்கையுளே இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும், மக்களே விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடிளுல் அவ்விலக்கியம் குறையுடைய இலக்கியமாக அமையும்

symbol is unknown. The word puja, from a root'pujappears like the thing it connotes, to be of Dravidian origin also. This word or root is not found in any Aryan or Indo-European language outside India.” 9. துணைமலர்ப் பிணைய லன்னஇவர்

மணமகிழ் இயற்கை காட்டி யோயே!

-குறுந். 229 : 6-7, 10. குறிஞ்சிப் பாட்டு : 62-96,