பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பில் வேடுவர் குறவர் 115

தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்

எனவரும் பகுதி, குறவர்தம் இசைக்கருவிகளைக் கூறுவதாகும், குரவைக் கூத்தும், வெறியாடலும் இவர்கள் அறிந்திருந்தனர்.

குரவைக் கூத்தொன்று ஆடுகம். கொண்டு நிலைபாடி ஆடும் குரவை.

என வரும் பகுதிகள், குரவைக் கூத்தினைப் பற்றியவை.

குறமகள் கொண்ட காதல்நோயை அறியாத அவள் அன்னே, கடம்பல்ை ஏற்பட்டது அந் நோய் என்று, அதைத் தீர்க்க வெறியாடும் வேலனை அழைப்பாள். ஆகவே குன்றங் களில் வெறியாடும் வேலர்களும் உண்டு.

மலைவளம் காண வந்த செங்குட்டுவனை முதற்கண் வரவேற்றது குறவர்தம் குரவைக் கூத்தின் ஒலியும், குறிஞ்சிப் பண்ணின் ஒலியும், தினகுற்றும் மங்கையரின் வள்ளைப் பாட்டின் ஒலியுமே யாகும்.

குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும் வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் தினைக்குறு வள்ளையும்

குறிஞ்சிப் புலங்களில் மிகுந்தொலிப்பதைக் கூறுகிறார் இளங்கோ அடிகள்.

பிற மக்களுடன் தொடர்பு

அலேக்கும் தொழில் வேடுவரோடு அயலார் தொடர்பு கொள்ள விழையாததில் வியப்பொன்றுமில்லை. ஆயினும் இவ் வேடுவர் அயலூர்களுக்கு இரவில் சென்று, அவர்களின் ஆநிரைகளேக் கவர்ந்து வந்தனர். அவ்வகையில் வேடுவர்தம் அயலவர் தொடர்பு, இனிய நல் தொடர்பாக இருக்கவில்லை. வேந்தனுக்கும், வேடுவர்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேற்று நாட்டின்மீது, படையெடுக்க விழையும் வேந்தன்,