பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மலர் காட்டும் வாழ்க்கை

போரின் முதற்கண் நிகழும் வெட்சியாகிய ஆநிரை கவர்தலுக்கு, இவ் வேடுவரையே துணைகொள்வான். வேட்டுவ வரியில் இளங்கோ பாடியிருப்பது பாண்டிய நாட்டு Lπόσυ வேடுவர்களே. ஆகவே அவர்கள் பிறநாட்டு ஆநிரை வளம் பாழ்படும்படி, பாண்டி மன்னன் வெட்சி சூடுக என வாழ்த்து கின்றனர்.

பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறகாட்டுக்

கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே

என்னும் வேட்டுவ வரிப் பகுதியினைக் காண்க.

இனி, குறவர்கள் மன்னவரோடும் மற்றவரோடும் தொடர்பு உடையவர் என்பதை மலைவளம் காணவந்த செங்குட்டுவனை வஞ்சியிற்கண் கண்டு, பல பொருள்களை வழங்குவதிலிருந்து அறியலாம். மலை விளைந்த சந்தனம் முதலிய மணப்பொருள்களும், மணிகளும் மற்றை நில மக்களிடத்து வழங்கியமையை ஆசிரியர் பலவிடங்களில் கூறியிருப்பதால், வணிகம் காரணமாகவும் தொடர்பு குறிஞ்சி நில மக்களுக்கும் மற்றவர்க்கும் இருந்தமை தெளிவாகிறது.

முடிவுரை

இதுகாறும் வேடரும், குறவரும் மேற்கொண்ட உழைப்பு, அவர்தம் உணவு, உடை, நடைமுறைப் பழக்க வழக் கங்கள், கொண்டாட்டங்கள், நெஞ்சப்பாங்குகள் பண்பாடு கள், கலைச்சிறப்பு வகைகள், பிறமக்களுடன் தொடர்பு ஆகியவற்றை விரித்துக் கண்டோம். அவர்தம் குற்ற உணர்வு, தண்டனை முறைகளை அறிய நூலுள் சான்றுகள் இல்லை யெனினும், அவை அவர்களிடையே இல்லாமல் இருந்திரா என்பதை உறுதியாக நம்பலாம்.