பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மணிமேகலை காட்டும் பண்புகள்

தமிழ்மொழியில் வழங்கும் ஐம்பெருங் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பனவாகும். ஐம்பெருங் காப்பியங்கள்’ என்னும் வழக்கு, பண்டு தொட்டே இருந்து வருகிறது. இவற்றுள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்றுமே ஆகும். வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரு நூல்களில் சில பகுதிகளும் பாடல்களுமே கிடைக்கின்றன. சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமயக் காப்பியங்களாகும். மணிமேகலையும் குண்டலகேசி யும் பெளத்த சமயக் காப்பியங்களாகும்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கதைத் தொடர்பு உடையன. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி மணிமேகலை எனலாம். சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவனை கோவலனுக் கும் பரத்தையர் குடியிற்பிறந்த அவன் காதலி மாதவிக்கும் மகளாகப் பிறந்தவளே மணிமேகலை ஆவள். மணிமேகலையின் மாண்புறு வாழ்வினை வடித்துரைப்பது மணிமேகலைக் காப்பியமாகும். மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்’ என்பர் இளங்கோவடிகள். எனவே, சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்: என வழங்கப்படும்.

தமிழில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம் என்றால், தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம்