பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மலர் காட்டும் வாழ்க்கை

மணிமேகலை எனலாம். மணிமேகலை துறவு’ என்ற பெயரும் இக் காப்பியத்திற்கு உண்டு என்பதை,

பூத்தபுனல் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு வாய்த்த மணிமேகலை துறவு

என்னும் பழைய வெண்பா ஒன்றன் தொடரால் அறியலாம். மேலும் சிவஞான சித்தியார்க்கு உரை எழுதிய ஞானப் பிரகாசர் என்பாரும் இந் நூலை மணிமேகலை துறவு” என்றே குறிப்பிட்டுள்ளார்.

மணிமேகலை ஒரு புரட்சிக் காப்பியம் எனலாம். பரத் தையர் குடியிலே பிறந்து, ஆயினும் அக் குலவொழுக்கத்திற்கு இயைய வாழாமல், அதற்கு மாருகத் தன் வாழ்க்கையினையே துறந்து, தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெற்றி யளாய் வாழ்ந்த அறச்செல்வி மணிமேகலையின் பீடுடைய பெருவாழ்வினை இக காப்பியம் உணர்த்தி நிற்கிறது எனலாம். மக்கட் சமுதாயத்தை அல்வழி நீக்கி நல்வழிப்படுத்த எழுந்த ஒரு சீர்திருத்தக் காவியம் மணிமேகலை. இலக்கியவுலகில் இந் நூலின் தனிச் சிறப்பு இது என்பர் அறிஞர். மணிமேகலை மாபெரும் பத்தினி கண்ணகியின் மகளாகவே கூறப்படு கின்றாள். மாதவியின் வாக்காலேயே இவ்வுண்மை புலப்படு கின்றது.

மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழிற்படாஅள்

(ஊரலருரைத்த காதை 55-57)

பெருங்காப்பியத்தின் தலையாய பண்பு ஒப்பாரும் மிக் காரும் இல்லாத் தலைமகனைப் பெற்றுத் திகழ்தலே ஆகும். மணிமேகலை காப்பியத்தின் தலைவி மணிமேகலை, அழகு, பண்பு முதலியவற்றால் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ் கிருள்.