பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் 119

மணிமே கலைதன் மதிமுகம் தன்னுள் அணிதிகழ் நீலத் தாய்மலர் ஒட்டிய கடைமணி யுகுநீர் கண்டன ளுயின் படையிட்டு நடுங்கும் காமன்; பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? பேடியர் அன்றாே பெற்றியின் கின்றி.டின் !

(மலர்வனம்புக்க காதை 20-25)

இவ்வளவு அழகுச் செவ்வி வாய்ந்த மணிமேகலையும், உதயகுமரனுக்கு அஞ்சிப் பளிக்கறையில் ஒளிந்து கொண்ட போது, அவன் அவளை எய்தப் பெருமல் திட்டிவிட்டுச் சென்று விட்டபொழுது, பள்ளத்திற் பாயும் வெள்ளம் போல் புதுவோன் பின்னர்த் தன் நெஞ்சம் போய்விட்டதாகப் புலம்பி யுரைத்திருப்பதனைப் பின்வரும் தொடர் கொண்டு தெளியலாம் :

கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டி யென்று இகழ்ந்தன கிை நயந்தோன் என்னது புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் இதுவோ அன்னய் காமத் தியற்கை இதுவே யாயின் கெடுகதன் திறமென மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான் சுதமதி தன்னெடு கின்ற எல்லையுள்

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 8:6-93)

உலகவியற்கையோடும் உளவியற்பாங்கோடும் மேற் கண்டவாறு மணிமேகலையின் மனநிலை சுட்டப்பட்டுத் தானே தன் ஒடும் நெஞ்சினைத் திருத்தி நிறுத்திச் செம்மை செய்து கொண்டு துறவு நிலையில் தூயளாய் நின்று, அறச் செல்வியாய்த் திகழும் மணிமேகலை தன்னேரில்லாத் தலைவி யாய் மணிமேகலைக் காப்பியத்தில் ஒளிர்கின்றாள். அவள் தன்