பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மலர் காட்டும் வாழ்க்கை

பண்பு நலன்களோடு மணிமேகலைக் காப்பியத்தின் வழி, அக் காப்பியத்தின் ஆசிரியராம் சீத்தலைச் சாத்தனர் காட்டும் பண்புகள் சிலவற்றைப் பாங்குறக் காண்போம்.

மணிமேகலைக் காப்பியம் வற்புறுத்தும் தலையாய அறப் பண்பு பசிப்பிணி யொழிப்பாகும். கொடிது கொடிது வறுமை கொடிது” என்பர்.

இன்மை எனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்

(குறள் : 1042)

பசிப்பிணி என்பது ஒரு பாவி. அதைப் போலக் கொடுமைப் பிறவி பிறிதொன்றுமே இல்லை. உயர்ந்த குடியிலே பிறந்தவராயினும் அவர்களைப் பசிப்பிணி பற்றிக்கொண்டால் அவர்களது மனிதத்தன்மை மாறிவிடும். அவர்தம் குடிப் பிறப்பின் பெருமை குன்றிவிடும். பரம்பரைப் பெருமை பறந்து போகும். தீமைக் கடலைக் கடப்பதற்குத் தெப்பமாக உதவும் புணையாம் கல்வி என்னும் தெப்பத்தினையும் பசிப்பிணியாற் பதறுவோர் கைவிட்டு விடுவர். பின் தீமைக்கடலில் ஆழ்ந்து தவிப்பர். மக்களுக்கு அழகு தரும் அணியாம் நாணமும் பசிப்பிணி வந்துற்றால் அவரை விட்டு நீங்கிவிடும். எத்தகைய இழிசெயலையும் இயற்றத் துாண்டும். அழகை அகற்றும். அழகிய இளம் மனைவியரோடும் பிறன்கடை வாயிலிற் சென்று இரந்து நிற்கவும் செய்யும். இவ்வளவு கொடுமைகளுக்கு மேலும் ஒருவனைப் பசிப்பிணி துன்பத்தில் ஆழ்த்தும் தகைய தாகும். இதனைச் சா த் த ைர் வாய்மொழியாகவே கேட்போம் :

குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பங் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம்; நாணணி களையும் மானெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி

(பாத்திரம் பெற்ற காதை : 76-80)