பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் 121

மேலும் சாத்தனர் பசிக்கொடுமையினை விவரிப்பதற்குப் பஞ்ச காலத்தில் உணவேதும் கிடைக்காத நிலையில் நாய்க்கறி உண்ணத் தலைப்பட்ட விசுவாமித்திர முனிவனையும், பெற்ற பிள்ளையையே உண்ண ஒருப்பட்ட தாயையும் காட்டுவர்.

எனவே, இவ்வுலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உண்ண உணவளிப்பதே அறத்தினும் அறம்; தலையாய அறம் என்று அழுத்தந் திருத்தமாக வற்புறுத்துகின்றார் சாத்தனர்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(பாத்திரம் பெற்ற காதை 95-96)

மணிமேகலைக்குப் பெளத்த தருமத்தை உபதேசித்த அறவண அடிகளும், மக்கள், தேவர் ஆகிய இருவர்க்கும் ஏற்ற முடிவான அறம் பசிப்பிணி யொழிப்பே என்றும், அதுவே மிகப்பெரிய நல்லறம் என்றும் நவின்றதாக அறிகிருேம்.

மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர்

(அறவணர்த் தொழுத காதை 116-119)

மேலும், ‘அறம்’ என்ற சொல்லுக்கே விளக்கம் அளிப்பது போல மணிமேகலைக் காப்பியத்தில் அமைந்துள்ள பின்வரும் தொடர்கள் உன்னியுணரத் தக்கனவாகும்.

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்: மன்னுயிர்க் கெல்லாம்