பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மலர் காட்டும் வாழ்க்கை

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்,

(ஆபுத்திரனேடு மணிபல்லவ மடைந்த காதை 22.8-31)

எனவே ஒருவன் உயிர்வாழ இன்றியமையாத் தேவையாய் இலங்கும் உண்டி, உடை,உறையுள் ஆகிய மூன்று ‘உ'க்களும் இவ்வுலகிற் பிறந்த ஒவ்வொருவர்க்கும் கிடைக்கப்பெற வேண்டும். காலங்கள் கடந்து வாழும், காலத்தில் நின்று வாழும் இவ்வுயரிய கருத்தினை முதன் முதலாகத் தமிழிலக் கியத்தில் தெளிவாக வற்புறுத்திக் கூறுவது மணிமேகலைக் காப்பியமே யாகும்.

அடுத்த அறமாகச் சாத்தர்ை சாற்றுவது சாதியொழிப் பாகும். சாதி களைந்திட்ட ஏரி நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும் என்று இக்காலக் கவிஞர் ஒருவர் குறிப்பிட்டார். மனிதர் செத்தபிறகு அவர்களை அடக்கம் செய்யும் இடத்தின் மேல் எழுந்த சமாதிகளைக் கொண்டே செத்தவர் இன்ன சாதியினர் என எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் மணிமேகலை காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இடுகாடு அமைந்திருந்தது.

அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்

(சக்கரவாளக் கோட்ட முரைத்த காதை 54-59)

ஆபுத்திரன் பிறப்பை இழிந்த பிறப்பென்று கூறி அந்தணர்கள் எள்ளி நகையாடிய பொழுது, ஆபுத்திரன் தன்கண் வெகுளியேதுமின்றி அந்தணர்களைப் பார்த்துப் பின் வருமாறு பேசின்ை :